வவுனியாவையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அவர்கள் இன்று அதிகாலை தனுஷ்கோடி, அரிச்சல்முனை ஒன்றாம் மணல்திட்டு பகுதியில் ராமேஸ்வரம் கரையோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஐவரும் மேலதிக விசாரணைகளுக்காக மண்டபம் பொலிஸ் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக சென்றவர்களின் எண்ணிக்கை 293 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.