நிதியமைச்சின் தரவுகளை நம்பவேண்டாம் – மஹிந்தானந்த அளுத்கமகே

நிதியமைச்சினால் வழங்கப்படும் தரவுகளின் துல்லியத்தன்மை தொடர்பில் அவதானமாக செயற்படவேண்டுமென முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே ஜனாதிபதிக்கும், அமைச்சரவைக்கும், அரச உயர் அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார். நேற்றைய(08.02) பாரளுமன்ற உரையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நிதியமைச்சினால் வழங்கப்பட்ட தரவுகள் தொடர்பில் பிழைகள் காணப்பட்டதனை நிதியமைச்சின் அதிகாரிகளே ஒத்துக்கொண்ட சம்பவங்களும் காணப்படுவதாக கூறிய மஹிந்தானந்த அளுத்கமகே, நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட தரவுகளுக்கும், ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் வழங்கிய தரவுகளுக்குமிடையில் 1000 பில்லியன் ரூபா வித்தியாசம் காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

Social Share

Leave a Reply