மின் தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழப்பு..!

புபுரஸ்ஸ – லெவன்வத்த பகுதியிலுள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதையடுத்து அருகில் உள்ள வீட்டிலிருந்து மின்சாரம் பெறுவதற்கு முயற்சித்துள்ளார்.

இதன்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புபுரஸ்ஸ – லெவன்வத்த பகுதியை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version