பணம் வசூலித்து ஆசிரியர்களுக்குப் பரிசு வழங்க தடை!

ஆசிரியர்களுக்குப் பணம் வசூலித்து பரிசுகளை வழங்குபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு அன்பளிப்பு வழங்குவதை தடை செய்து சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டுள்ள போதிலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற பரிசுகளை ஆசிரியர்கள் பெறுவதும் தவறு என்று மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version