டுபாய் மர்கஸில் இஸ்ரா வல் மிஃராஜ் தின சிறப்பு நிகழ்ச்சி மர்கஸ் சகாஃபி இஸ்லாமிக் மையத்தில் இன்று(11) நடைபெற்றது.
டுபாய் அரசின் இஸ்லாமிய விவகாரம் மற்றும் தொண்டுகள் துறையின் அனுமதியுடன் நடைபெற்ற இந் நிகழ்விற்கு இலங்கை மார்க்க அறிஞர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார்.
இதன்போது மௌலவி ஷேக் அப்துல்லா நூரியினால் இறைவசனங்கள் ஓதப்பட்டது.

மேலும், கீழக்கரை பி.ஆர்.எல். முகம்மது சலீம் இந் நிகழ்விற்கு தலைமை வகித்தார்.
அவருடைய தலைமை உரையின் போது, தொடர்ந்து தமிழ் மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத்தினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதோடு, இலங்கை மௌலவி எம்.எஸ். நிஸ்தார் நுழாரியினால் சிறப்புச் சொற்பொழிவும் ஆற்றப்பட்டது.
முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் சிற்றுரை நிகழ்த்தியதுடன், மர்கஸின் பணிகள் குறித்து சயீத் நூரானி, நோஃபல் நூரானி ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
இறுதியில், திண்டுக்கல் ஜமால் முகைதீன் நன்றியுரையை நிகழ்த்தியதன் பின்னர், மர்கஸ் மதரஸாவின் முதல்வர் அப்துல் சலாம் சஹாபி மற்றும் அதிரை அப்துல்லா ஹஜ்ரத் ஆகியோரால் துஆ ஓதப்பட்டது.
இந் நிகழ்வில் ஈமான் அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம்.ஹபிபுல்லா கான், அமீரக காயிதேமில்லத் பேரவையின் நிர்வாகிகள் பரக்கத் அலி, முஹம்மது காமில், இஸ்மாயில் காக்கா, சாகுல், லத்தீப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்