நிதி அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார தொழிற்சங்கங்களுக்கு இடையில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கு அமைய, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
சுகாதார ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், நாளை(13) மீண்டும் பாரிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாகவும் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.