இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவது சந்தேகம். கொழும்பில் கடும் மழை பெய்து வருகிறது. மைதானம் மூடப்பட்டுள்ள போதும் விரிப்புகளை மேலாக நீர் காணப்படுகிறது. மைதானம் சூழ வெளிச்சம் மிகவும் குறைவாக இரவு போன்று காணப்படுகிறது. மழை விடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படுவதனால் போட்டி நடைபெறுவது சந்தேகமே. இன்றைய தினம் இடியுடன் கூட மழை பெய்யுமென ஏற்கனவே வாநிலை அவதான நிலையில் அறிவுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
