நிகழ்நிலை காப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
நிகழ்நிலை காப்பு சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சமூக ஊடக வலையமைப்புகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பிலும், குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்ட முறை தொடர்பிலும் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர்.