மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த நபர்கள் பயிர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது யானை வேலியின் ஊடாக பாய்ந்த மின்சாரம் தாக்கியதினால் உயிரிழந்துள்ளனர்.
21 மற்றும் 51 வயதான இருவருரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இன்று (13) காலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.