இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று (14.02) மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச போட்டி கண்டி பல்லேக்கலவில் நடைபெட்றது. இந்த போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்களினால் வெற்றி பெற்று தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 266 ஓட்டங்களை பெற்றது. இதில் ரஹ்மத் ஷா 65(77) ஓட்டங்களையும், அஸ்மதுல்லா ஓமர்ஸை 54(59) ஓட்டங்களையும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 48(57) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ப்ரமோட் மதுஷான் 3 விக்கெட்களையும், அசித்த பெர்னாண்டோ, டுனித் வெல்லாலகே, அகில தனஞ்சய ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 35.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 267 ஓட்டங்களை பெற்றது. இதில் பத்தும் நிசங்க 118(101) ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 91(66) ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 40(29) ஓட்டங்களையும் பெற்றனர். பத்தும் நிசங்க, அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக 173 ஓட்டங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர். 2 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த பத்தும் நிசங்க, குசல் மென்டிஸ் 78 ஓட்டங்களை இருவரும் இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். பந்துவீச்சில் கெய்ல் அஹமட் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.