பொது மலசலகூட கட்டணம் அதிகரிப்பு!

புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பொது மலசலகூடத்தை பயன்படுத்துபவரிடம் அறவிடப்படும் கட்டணம் 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணியில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இந்த பொது கழிவறை அமைந்துள்ளதுடன், பலருக்கு பயன்தரும் வகையில் இயங்கி வந்தது.

இந்த பொது கழிப்பறை அமைப்பு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு சொந்தமானது எனவும் வெளி தரப்பினருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பராமரிப்பு பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாட்டு பணிப்பாளர் ​​தெரிவித்துள்ளார்.

பயணிகளிடம் இருந்து அவ்வப்போது வரும் புகார்களின் அடிப்படையில், விலைவாசி உயர்வு குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுத்துள்ள்ளதாகவும், இந்த விலையேற்றம் குறித்து தமக்கு இதுவரையில் அறிவிக்கப்படவில்லை எனவும், இதுபற்றி கண்டறியும் பணியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version