T20 தொடரும் இலங்கை வசமானது

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று (19.02) 2 ஆவது T20 போட்டி ரங்கிரி தம்புள்ளையில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி 72 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 2-0 முன்னிலை பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்றது. இதில் சதீர சமரவிக்ரம 51(42) ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 42(22) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அஸ்மதுல்லா ஓமர்ஸை, மொஹமட் நபி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், பசல்ஹக் பரூக்கி, நவீன் உல் ஹக் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 17 ஓவர்களில் சகல விக்கெட்களையும் 115 இழந்து ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் யாரும் பெரிதளவில் பிராகாசிக்கவில்லை. பந்துவீச்சில் அஞ்சலோ மத்தியூஸ், பினுற பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க, , மதீஷ பத்திரன ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், தசுன் ஷானக, மஹீஸ் தீக்ஷண ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். இது வனிந்து ஹசரங்கவின் 100 ஆவது T20 விக்கெட்டாகும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version