சுகாராத் துறையின் போக்குவரத்து சேவைக்கு ஜப்பான் நன்கொடை..!

சுகாதாரத் துறையின் போக்குவரத்துச் சேவைகளுக்காக ஜப்பான் நன்கொடை யளித்துள்ளது.

சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ உதவிகளை சுகாதார அமைச்சிடம் கையளிக்கும் நிகழ்வு கொழும்பில் இன்று இடம்பெற்றது.

இதன்போது அம்பியூலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களுக்காக ஜப்பானிய அரசாங்கத்தால் 40,000 MT டீசல் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Mizukoshi Hideaki அவர்களினால் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் எரிபொருள் இருப்பு கையளிக்கப்பட்டது.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

Social Share

Leave a Reply