முன்னர் கூறப்பட்டதை விடவும் மின் கட்டணத்தில் அதிகளவு நிவாரணம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய சிறப்புரையின் போதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார்.
கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை இன்று அல்லது நாளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் முன்வைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலவும் வறட்சி காரணமாக மின் உற்பத்தியில் நீர் மட்டம் தாக்கம் செலுத்தியுள்ள நிலையில் மின் கட்டணத்தில் அதிகளவு நிவாரணம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.