கடந்த ஒக்டோபர் மாதம் மின் கட்டணத்தில் அதிகரிக்கப்பட்ட தொகை முழுமையாக நீக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (21.02) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனையை மின்சார சபை இன்று (21.02) பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் சமய ஸ்தலங்கள் மற்றும் வீட்டுப் பிரிவின் மின்சாரக் கட்டணம் பதினெட்டு வீதத்தாலும், கைத்தொழில் மற்றும் ஹோட்டல் துறை சார்ந்த இடங்களில் பன்னிரெண்டு வீதத்தாலும் அரச நிறுவனங்களின் மின்சாரக் கட்டணம் 24 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறைந்த பட்சம் ஒக்டோபர் மாதத்தில் அதிகரிக்கப்பட்ட தொகையேனும் முழுமையாக நீக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.