நாட்டில் தமிழனத்தை அழிப்பதற்கான செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் உலகெங்கும் தமிழ்மொழி வளர்ந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்றை நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கை சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் கடந்தள்ள போதிலும் தமிழர்களை ஒடுக்குவதற்கு புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டு இன ரீதியாக அழிப்பதற்கான முயற்சிகள் காரணமாகவே இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக நிர்மலநாதன் இதன்போது கூறினார்.
இலங்கையில் சகல மக்களும் மத, இன, மற்றும் மொழி ரீதியாக சமத்துவத்துடன் வாழக்கூடிய வகையில் அரசியல் யாப்பில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார்.
இதேவேளை கடந்த 15 ஆம் திகதி மன்னாரில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்டமைக்கு மரண தண்டனை தண்டனை வழங்கப்பட வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
1998ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் இதேபோன்று பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பத்தப்பட்டமையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சந்தியில், குறித்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை சார்ள்ஸ் நிர்மலநாதன் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி வரை தமிழீழ விடுதலைப் புலிகளால் தம்முடைய பிரதேசத்தில் சிறுவர்கள், பெண்களுக்கு பாதுகாப்பு காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.