கல்முனை, பெரியநீலாவனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்னு வித்தியால வீதி பகுதியில் பாடசாலை வேன் ஒன்று மோதியதில் நான்கு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை வேனில் தனது சகோதரியை பாடசாலைக்கு அனுப்ப ஏற்றிக்கொண்டிருந்த வேளையில் குறித்த குழந்தை வேனின் அடியில் விழுந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் சிக்கிய குழந்தை கல்முனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.