மேல் மாகாண தவணை பரீட்சைகள் இடைநிறுத்தம்..!

மேல் மாகாணத்தில் அரச பாடசாலைகளின் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவிருந்த கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களின் வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version