இன்று 77ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் பிரதமர்

இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 77ஆவது பிறந்த தினம் இன்றாகும்.

1945 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி பிறந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு தற்போது 76 வயது பூர்த்தியாகியுள்ளது.

அதற்கமைய அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சந்தஹிருசேய தாது கோபுரம் இன்று திறக்கப்படும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது பதவிப்பிரமாண பூர்த்தியை முன்னிட்டு குறித்த தாது கோபுரத்தை திறந்து வைக்கவுள்ளனர். அதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துக்கொள்ளவுள்ளார்.

1970 ஆம் ஆண்டு தனது 24 வயதில் இளம் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய பிரதமர், 1977 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டார்.

இதன் பின்னர் 1994ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தில் பல அமைச்சு பதவிகளை வகித்துள்ளார்.

இன்று 77ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் பிரதமர்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version