தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள சிவன் கோவிலில் உயிருள்ள யானைக்கு பதிலாக ரோபோ யானை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
யானைகளை பாதுகாப்பதற்கான முயற்சியாக அறிமுகமாகியுள்ள இந்த ரோபோ யானை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்துக்களின் கலாசாரத்தில் யானைகள் முக்கிய பங்கு வகிக்கின்ற நிலையில் ஆன்மிகத்தின் பெயரால் யானைகள் துன்புறுத்தப்படுவதாக தெரிவித்து பெண் ஒருவரால் குறித்த சிவன் கோவிலுக்கு ரோபோ யானை பரிசளிக்கப்பட்டுள்ளது.
உயிருள்ள யானையைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த யானையை பக்தர்கள் வணங்குவதோடு சிறுவர்களும் அச்சமின்றி ரோபோ யானையுடன் செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.
கோவிலில் உயிருள்ள யானைகளை வைத்து என்னென்ன பூஜைகள் செய்யப்படுமோ, அவை அனைத்தும் இந்த ரோபோ யானையை வைத்தும் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
இரும்பு மற்றும் பைபர் கொண்டு, 900 கிலோ கிராம் நிறையுடைய இந்த ரோபோ யானைக்கு, ஹரிஹரன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.