ஆண்-பெண் சமூக சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்கள் இரண்டும் எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டத்தின் பிரகாரம் தனியான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளதாகவும், இதனுடாக பெண்களின் முன்னேற்றத்திற்கும் வலுவூட்டலுக்குமான ஏற்பாடுகளை மேற்கொள்வுள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் நேற்று (7) வர்த்தமானியில் வெளியிடப்பட்டதாகவும், ஆண்-பெண் சமூக சமத்துவ சட்டமூலம் எதிர்வரும் வாரத்தில் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆசியாவிலேயே முதன் முறையாக, ஆண்-பெண் சமூக அடிப்படையைக் கொண்ட வரவு செலவுத் திட்டத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்பார்த்துள்ளார்.