ஜனாதிபதியின் மகா சிவராத்திரி செய்தி!

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களினால், அனைத்து உயிர்களையும் துன்பத்திலிருந்து விடுவிக்க சிவபெருமானிடம் செய்த பிரார்த்தனையை நினைவு கூறுவதாக அமைந்திருக்கிறது.

மனிதர்களிடம் இருக்கும் மமதையும், அகந்தையையும் அகற்ற உதவும் ஞானத்தைப் பரவச் செய்யும் வகையில் உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களை மீட்க அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டது.

இந்து மக்கள் மாத்திரமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் வாழ்வையும் செழிப்பாக்கும் எதிர்பார்ப்புடன் இன்று மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகள் வெற்றிகரமான நிலைக்கு வந்துள்ளது.

மகா சிவராத்திரி தினத்தை அர்த்தமுள்ளதாக்கும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் மேம்படுத்தி, மமதை, அகங்காரம் இல்லாத நாடாக அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் எதிர்காலத்திற்கான திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

மகா சிவராத்திரி தினத்தில் இந்து மக்களினால் ஏற்றப்படும் ஔியானது, முழு இலங்கை மக்களின் வாழ்விலும் ஒளியேற்றுவதாக அமையட்டும் என பிராத்திக்கிறேன்.

ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
2024 மார்ச் 07 ஆம் திகதி

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version