மூன்றாவது தெற்காசிய கனிஷ்ட பேட்மிண்டன் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு 23 பதக்கங்கள்மூன்றாவது தெற்காசிய கனிஷ்ட பேட்மிண்டன் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை 23 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்த போட்டி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் கடந்த 03 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை நடைபெற்றது.
இதன்போது 15 மற்றும் 17 வயதுக்குட்பட்ட இலங்கை கனிஷ்ட பேட்மிண்டன் அணிகள் சம்பியன் பட்டத்தை வென்று 08 தங்கப்பதக்கங்களை வென்றன.
மேலும், இலங்கை அணிகள் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்புப் போட்டிகளில் 09 தங்கப் பதக்கங்களையும் 06 வெள்ளிப் பதக்கங்களையும் கைப்பற்றியிருந்தன.
விளையாட்டு வீரர்கள் இன்று (09) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.