இந்தோனேசியாவில் இயற்கை அனர்த்தத்தால் 20 இற்கும் மேற்பட்டோர் பலி

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 07 பேர் காணாமற்போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்கு சுமத்ரா மாகாணத்தின் பெசிசிர் செலாடன் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இயற்கை அனர்த்தம் காரணமாக சுமத்ராவில் 75 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version