கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அவர்களின் உடல் நிலை தற்பொழுது தேறி வருவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரச்சார செயலாளர் மு.பரணிதரன் வி மீடியாவிற்கு தெரிவித்தார்.
இன்னும் 3 அல்லது 4 நாட்களில் அவர் வீடு திரும்பி விடுவார் என்றும் தெரிவித்த அவர், மனோ கணேசன் எம்.பி விரைவாக குணமடைய பல்வேறு சமய ஸ்தலங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் கட்சி உறுப்பினர்கள் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் மு.பரணிதரன் மேலும் குறிப்பிட்டார்.
