நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இவ்வாறு மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை தொடர்பான செம்மஞ்சள் எச்சரிக்கையும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டள்ளது.
இதன்படி மேல், வடமேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்றைய தினம் (11) வெப்பமான வானிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.