வாள்வெட்டுத் தாக்குதளுக்கு இலக்காகி இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதளுக்கு இலக்காகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதுடைய தவச்செல்வம் பவிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முன்னதாக மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நோக்கில் மேற்படி வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வாள்வெட்டுச் சம்பவம் நேற்று (11.03) வட்டுக்கோட்டையிலிருந்து காரைநகர் சென்று திரும்பும் போதே இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த நபர் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version