நீர் பாவனை அதிகரிப்பு..!

நிலவும் வறட்சி காரணமாக நீர் பாவனை 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக மேட்டுநிலப் பகுதிகள் மற்றும் நீர் விநியோகக் கட்டமைப்பு பகுதிகளில் வாழும் மக்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், எந்தவொரு பகுதிக்கும் நீர் விநியோகம் இதுவரை நிறுத்தப்படவில்லை என சபை அறிவித்துள்ளது.

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது நிலவும் வறட்சி, அடுத்த மாதம் வரை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version