முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஏழு சந்தேக நபர்களின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்த மாளிகாகந்த நீதவான் லொச்சனி அபேவிக்ரம, வழக்கு விசாரணை முடியும் வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக சந்தேகநபர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் எழுத்து மற்றும் வாய்மொழி சாட்சியங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க மறுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களுக்கு பிணை வழங்குமாறு கோரி அவர்களின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்த பிணை விண்ணப்பங்கள் தொடர்பில் திறந்த நீதிமன்றில் இந்த உத்தரவை அறிவித்த நீதவான், சந்தேக நபர் மற்றும் ஏனைய 09 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.