கொவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் அரசாங்கம் பாரியளவு தொகை வரி வருமானத்தை இழந்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது
அதன் ஆணையாளர் நாயகம் H.M.W.C பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், கொவிட் நிலைமைகளினால் நாட்டுக்கு 100 பில்லியன் ரூபா வரையிலான வருமான வரி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்கள் அரச வருமான இழப்பில் தாக்கத்தை செலுத்தியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, பெரு நிறுவனங்கள் மீது வரி அறவீடு செய்யும் அரசாங்கத்தின் யோசனைத் திட்டங்களினால் நுகர்வோர் பாதிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது எனவும் தெரிவித்த அவர், நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் வரிச் சலுகைகள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் மேலும் குறிப்பிட்டார்.