வவுனியா – வெடுக்குநாறி மலை சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாட்டின்போது கைது செய்யப்பட்ட எட்டு பேரை விடுதலை செய்யுமாறும், சிவராத்திரி பூஜை வழிபாட்டுக்கு தடை ஏற்படுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று (18.03) காலை மூதூரில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரிய பதாதைகளை ஏந்திகொண்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
திருகோணமலை மாவட்ட ஒன்றிணைந்த சிவில் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த கவனயீர்ப்பு நடைபவனி, மூதூர் பிரதான வீதியிலிருந்து ஆரம்பமாகி பிரதேச செயலகம் வரை சென்றதுடன், மூதூர் பிரதேச செயலகத்துக்குச் சென்று பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம். அலாவுதீனிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.