இலங்கை, பங்களாதேஷ் இடையிலான சீண்டல்கள் தொடருமா? – 1வது டெஸ்ட் இன்று 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்று(23) ஆரம்பமாகின்றது. அண்மைக்காலமாக இரு அணிகளுக்கு இடையிலான மோதல் போட்டியின் போதும் போட்டிக்கு பின்னரும் தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது.

தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே இரு அணிகளும் பின்னடைவுகளை எதிர்நோக்கியுள்ளன. உபாதை காரணமாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான அசித பெர்னாண்டோ இந்த போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான முஷ்பிகுர் ரஹீமும் உபாதை காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார். 

இலங்கை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரபாத் ஜெயசூர்யா மீது பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. 8 டெஸ்ட் போட்டிகளில் 63 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள பிரபாத், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெருமளவில் சாதகமான பங்களாதேஷ் சிலேட் மைதானத்திலும் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

கடந்த காலங்களில் சிலேட் மைதானத்தின் ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக அமைந்திருந்த போதும், நாளை விளையாடவுள்ள ஆடுகளம் முன்பை விட சற்று வித்தியாசமனதாக தென்படுவதாக பங்களாதேஷ் அணியின் பயிற்சிவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். 

அணிக்குள் அனுபவமிக்க வீரர்கள் காணப்படுவது, அணிக்கு பெறுமதி வாய்ந்த விடயமாகும் என மெத்தியுஸ், திமுத், சண்டிமால் போன்ற வீரர்களை சுட்டிக்காட்டி இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா தெரிவித்துள்ளார். 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பங்களாதேஷ் சிலேட் மைதானத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

இலங்கை டெஸ்ட் குழாம்: தனஞ்சய டி சில்வா(அணித் தலைவர்), குசல் மெண்டிஸ்(உப தலைவர்), திமுத் கருணாரத்னே, நிஷான் மதுஷ்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், லஹிரு உதாரா, பிரபாத் ஜெயசூரிய, நிஷான் ராஜித, நிஷான் ராஜித, எஃப். , லஹிரு குமார, சாமிக்க குணசேகர

பங்களாதேஷ் குழாம்: நஜ்முல் ஹுசைன் சாண்டோ ( அணித் தலைவர்  ), ஜாகிர் ஹசன், மஹ்மூதுல் ஹசன் ஜாய், ஷத்மான் இஸ்லாம், லிட்டன் குமர் தாஸ், மொமினுல் ஹக் ஷெராப், தவ்ஹீத் ஹ்ரிடோய், ஷஹாதத் ஹொசைன் திபு, மெஹிதி ஹசன் எஸ் மிராஸ், நயீம் ஹசன், ஷோரி இஸ்லாம், ஷோரி இஸ்லாம், தைஜுல் இஸ்லாம். அகமது, முஷ்பிக் ஹசன், நஹித் ராணா

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version