அமெரிக்காவின் முக்கிய பாலம் இடிந்து வீழ்ந்தது – 20 பேரை காணவில்லை

இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சரக்குக் கப்பல், அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள பெரிய பாலம் ஒன்றின் மீது மோதியதில், குறித்த பாலம் இடிந்து விழுந்துள்ளது.

அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, சுமார் 2.5 கிலோ மீட்டர் நீளமுள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் ஒரு பகுதி நீரில் விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. 

பாலம் இடிந்து விழ்ந்ததில் காணாமல் போன சுமார் 20 பேரை தேடி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சிங்கப்பூர் கொடியேற்றப்பட்ட ‘டாலி’ எனப்படும் குறித்த சரக்கு கப்பல் இலங்கையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version