சதுரங்க சபோட்டியில் சம்பியனானர் நோர்வே தமிழ் பெண்

உலகத் தமிழர் சதுரங்கப் பேரவையினால் இலண்டனில் கடந்த 24ம் திகதி நடத்தப்பட்ட சதுரங்க சுற்றுப்  போட்டியில் நோர்வே தமிழ் பெண் சம்பியன் கிண்ணத்தை வென்றார்.

உலகத் தமிழர் சதுரங்கப் பேரவையினால் இலண்டனில் Harrow Alperton Community மண்டபத்தில் பிரமாண்டமான முறையில் வேகச் சதுரங்கச் சுற்றுப் போட்டி நடாத்தப்பட்டிருந்தது. இப்போட்டியானது திறந்த (Open) போட்டியாக அமைந்திருந்தது.

இப்போட்டியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என  சுமார் 150 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தார்கள். இதில் 6 வயது முதல் 67 வயது வரையான போட்டியாளர்கள் பங்குபெற்றதோடு சென்ற ஆண்டை விட இரண்டு மடங்கு வீரர்கள் கலந்துகொண்டமை பார்வையாளர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

சதுரங்க சபோட்டியில் சம்பியனானர் நோர்வே தமிழ் பெண்

ஆரம்ப நிகழ்வின் அதிதியாக இலண்டன் கவுன்சிலர் ராஜன்- சீலன் வெம்பிளி மத்திய வார்டு (Councillor Rajan  Seelan Wembley Central Ward) மற்றும் இலண்டன் சட்டமன்ற உறுப்பினர் கிருபேஷ் ஹிரானி (Assembly member Krupesh Hirani) அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

போட்டியின்  இறுதியில் பரிசளிப்பு நிகழ்வில் Harrow Mayor – Ramji Chauhan மற்றும் Councillor Pinner – Kuha Kumaran ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை மேலும் சிறப்பித்திருந்தனர்.

பங்குபற்றியவர்கள் விகிதாசாரம், 
ஆண்கள்              68%
பெண்கள்             32%
10 வயதின் கீழ்    22%
12 வயதின் கீழ்    47% 16 வயதின் கீழ்    14% திறந்த பிரிவு       17%

அனைத்து வயது தரப்பினரும் கலந்து கொண்ட போட்டியாக இது அமைந்திருந்தது சிறப்பம்சமாகும். அத்துடன் பிரித்தானியாவின் பல தூர பகுதிகளில் இருந்து (London, Ashford, Cambridge, Wales, Coventry, Peterborough, Southend on sea, Maidstone, Croydon)  போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

வேகச் சதுரங்கப் போட்டியில் 10,13.16, Open (திறந்த பிரிவு) என 4 பிரிவுகளிலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தனித்தனியே 1,2,3,4,5 என வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டதுடன் சிறந்த பெண் போட்டியாளர் மற்றும் சிறந்த மூத்த போட்டியாளர் (senior player) ஆகியோருக்கும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டது.

10 வயதிற்கு குறைந்த அனைத்து இளம் வீரர்களுக்கும் ஊக்குவிப்பு பதக்கங்களும் மற்றும் பங்குபற்றிய  அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் சாம்பியன் படத்தினை நோர்வேயை  சேர்ந்த செல்வி ஹாரோனி அன்டன் அமரபால பெற்றுக் கொண்டார். 

இப்போட்டியானது உலகத் தமிழர் சதுரங்கப் பேரவையின் தலைவர் திரு.ரகுராஜ் தலைமையிலே இவ்வமைப்பின் ஸ்தாபகர் திரு.கந்தையா சிங்கத்தின் நெறிப்படுத்தலில் பிரதான நடுவராக திரு.விஜிதரன் மற்றும் பிரதான தொழில்நுட்ப நடுவராக திரு.ராஜன் மற்றும் இவர்களுடன் நடுவர்களாக திரு.அன்டன் அமரபால, ஸ்ரீ சாய்மருகன் ஆகியோரும் கடமையாற்றி இருந்தனர்.

வெற்றி பெற்றவர்களின் விபரம், 

10 வயதின் கீழ்
1. Karun Joshua Suresh
2. Yugan Chendurpandian Suganya
3. Shaarujan Mahinthan
4. Surya Vadali
5. Dhanushka Sri Sathish

13 வயதின் கீழ்
1. Dilip Rajaram
2. Ushakan Thushyanthan
3. Yaqub Syed-Hoque
4. Mithush Thayanithy
5. Mohammad Mustafa Sherzad

16 வயதின் கீழ்
1. Sanjai Rathinam Vijayanand
2. Roshan Amuthan
3. Rishabh Jain
4. Kabilan Bradeepan
5. Saran Navukkarasu

திறந்த பிரிவு
1. Sheroni Anton Amarapala 2. Dilip Rajaram
3. Ushakan Thushyanthan
4. Yaqub Syed-Hoque
5. Sanjai Rathinam Vijayanand

Best woman prize:  Sheroni Anton Amarapala
Best senior prize:  Vinasithamby Raveendhran

இப் போட்டி சிறப்பாக நடைபெற ஆதரவு வழங்கியவர்கள்,
பிரதான அனுசரணையாளர் – Lotus Caring Hands
இணை அனுசரணையாளர்கள் – First Choice Badminton Club, Educo London, VTS U.K.

உலகத் தமிழர் சதுரங்கப் பேரவையானது சமய, அரசியலற்ற, சதுரங்கத்தை உலகத் தமிழர்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்கும் வளர்ப்பதற்காகவும் சதுரங்க ஆர்வலர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.

காலை 9 மணிக்கு ஆரம்பமான போட்டி, மாலை 5 மணிக்கு இனிதே நிறைவடைந்தது

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version