தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து இன்று(28) பெண ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, சமனங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் காணப்படுவதாக சிதம்பரபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, அங்கு சென்ற பொலிஸார் குறித்த பெண்ணின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

ஆசிகுளம், சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஜெகநாதன் கவிப்பிரியா எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version