சிறிதரன் MP இக்கு எதிராக போராட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர்(EPDP) இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். போராட்டத்தின் இறுதியில் சிறிதரனின் கொடும்பாவியும் இதன் போது எரிக்கப்பட்டது.
பாராளுமன்றத்தில், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் “படிப்பறிவு” அற்றவர் என தனது உரையின் போது சிறிதரன் MP பேசியதற்கு கண்டனம் தெரிவித்தே இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகம் முன்பதாக ஆரம்பித்த இந்த போராட்டம், பேரணியாக வவுனியா தமிழரசு கட்சி அலுவலகம் சென்று, பின்னர் பழைய பேரூந்து நிலையம் முன்னதாக நிறைவுக்கு வந்தது.
அண்மையில் பாராளுமன்றத்தில் திலீபன் MP, தமிழரசு கட்சியினை விமர்சித்து உரையாற்றியதனை தொடர்ந்து சிறிதரன் MP கடுமையான வார்த்தை பிரயோகங்களை பாவித்ததோடு, கல்வியறிவு அற்றவர் எனவும் பேசியிருந்தார்.


இந்த போராட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அங்கத்துவர்கள், ஆதரவாளர்கள் என பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பேரணியாக செல்லும் போதும் பொது மக்களின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வீதியினை இடைமறித்து சென்றமை சுட்டிக்காட்டதக்கது.


தொடர்புடைய செய்தி

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version