புதிய மின்சார சட்டமூலம் எதிர்வரும் இரு வாரங்களில் வர்த்தமானியில் வெளியீடு

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் எதிர்வரும் 02 வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும்
என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும், இரண்டு வாரங்களில் இந்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் அவரது X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சட்டமூலம் மீளாய்வு செய்யப்பட்டதையடுத்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது.

இதன்பின்னர் வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் காலஅவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version