பௌத்த மதத்தை அழிக்க சதித்திட்டம்

இலங்கையில் பௌத்த மதத்தை அழிப்பதற்காக பல்வேறு சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அஸ்கிரிய பீடத்தின் தலைவர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார்.

பொல்கொல்ல சரவண விகாரையில் சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்திய பின்னர் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சில பௌத்தர்கள் போதி விலங்குகளாகத் தோன்றுவது இந்த சதிகளுக்கான கூறுகளாக அமைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சில பிக்குகளின் செயற்பாடுகளினால் பௌத்தம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து பௌத்தத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் தலைவர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version