சமையல்  எரிவாயுவின் விலை திருத்தம்?

ஏப்ரல் மாதத்திற்கான லிட்ரோ சமையல்  எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 135 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 4,115 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 05 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 55 ரூபாவால்  குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1,652  ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2.5 கிலோ கிராம் நிறையுடைய  சிலிண்டரின் விலை 23 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன்  புதிய விலை 772 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version