யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை வழக்குடன் தொடர்புடைய குற்றவாளியொருவர் உயிரிழந்துள்ளார்.
சுகவீனம் காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவர் உயிரிழந்துள்ளார்.
நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் இந்த நபர் 37 வயதுடையவர் ஆவார்.
குறித்த நபரின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.