இந்தியாவின் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட முருகன், ரோபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும்
இன்று காலை அவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
இவர்கள் விடுதலை செய்யப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
அரசியல் பிரமுகர்கள் மற்றும் மக்களின் கோரிக்கைகளுக்கமைய நேற்றைய தினம் (03) அவர்கள் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டனர்.
குறித்த மூவரையும் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சின்அனுமதி கிடைக்கப்பபெற்றதையடுத்து
சிறப்பு முகாமை பொறுப்பாளர்களால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.