பாராளுமன்ற தேர்தலை கோரும் மற்றுமொரு முயற்சியும் தோல்வி

பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றினை நிறைவேற்றி, பாராளுமன்றத் தேர்தலை கோரும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. 

113 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள இயலமையினால், இந்த முயற்சி தோல்வி அடைந்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

பசில் ராஜபக்‌ஷ, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலில் பொதுத் தேர்தலை கோரும் நோக்கில், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை திரட்டி தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.  

இருப்பினும், பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுத் தேர்தலுக்கு தயார் நிலையில் இல்லாத காரணத்தினால் இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

அரசியலமைப்பின் படி பாராளுமன்றத்தை எந்த நேரத்திலும் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. 

இத்கைய நிலையில், ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் தங்களுடைய பலத்தை நிருபிக்கும் நோக்கில் பாரிய மே தின பேரணிகளுக்கும், கூட்டங்களுக்கும் தயார்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version