மொரகஹகந்த – நாவுல வீதியில் வண்டுரமுல்ல பகுதியில் இன்று(05) அதிகாலை காட்டு யானை மீது லொறி மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வீதியில் பயணித்த லொறி, பாதையை கடக்க முற்பட்ட காட்டு யானை மீது மோதி கவிழ்ந்ததால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தின் போது காயமடைந்த 6 பேர் கொங்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இருவர் மாத்தளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்