வவுனியாவில் தமிழ் மாருதம் 2024

தமிழ் மாருதம் 2024 இன்று (06.04) வவுனியாவில் ஆரம்பமாகவுள்ளது. இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்கள் வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. வவுனியா தமிழ் மாமன்றம் வருடம் தோறும் இந்த நிகழ்வுகளை மிகவும் பிரமாண்டமாக நடாத்திவருகின்றது.

வவுனியாவில் தமிழ் மாருதம் 2024

இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சுவாமி விபுலானந்தர் சிலை முன்றலில் ஊர்வலம் ஆரம்பித்து மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தை சென்று அங்கு நிகழ்வுகள் ஆரம்பிக்கவுள்ளன. நடனம், நாட்டிய நாடகம், கவியரங்கு, விவாதம், சுழலும் சொற்போர், நாட்டார் பாடல் என பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

நாளை காலை 9 மணிக்கும் ஆரம்பிக்கும் நிகழ்வுகள் நண்பகலளவில் நிறைவடையும். பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் ஆரம்பித்து மாலை வேளையில் நிறைவடையவுள்ளன. பலன் தரும் நிகழ்வுகள் பல நடைபெறவுள்ள நிலையில் அனைவரையும் தமிழ் மாமன்றம் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version