இறுதிப் பந்தில் வெற்றியை  தட்டிப்பறித்த குஜராத் அணி  

இறுதிப் பந்தில் வெற்றியை தட்டிப்பறித்த குஜராத் அணி  இந்தியன் பிரீமியர் லீக் தொடரில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 

ஜய்பூர் மைதானத்தில் இன்று(10) நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

ராஜஸ்தான் அணி சார்பில் ரியான் பராக் 76 ஓட்டங்களையும் மற்றும் அணி தலைவர் சஞ்சு சாம்சன் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

குஜராத் அணி சார்பில் பந்துவீச்சில் உமேஷ் யாதவ், ரஹித் கான் மற்றும் மொஹித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

197 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு குஜராத் அணி துடுப்பெடுத்தாடும் போது 10வது ஓவரில் மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி சில நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்தது. 

இருப்பினும் போட்டியின் இறுதி வரை சிறப்பாக துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. 

குஜராத் அணி சார்பில் சுப்மன் கில் 72 ஓட்டங்களையும், சாய் சுதர்ஷன் 35 ஓட்டங்களையும், ரஹித் கான் 11 பந்துகளில் 24 ஓட்டங்களையும் மற்றும் ராகுல் திவட்டியா 11 பந்துகளில் 22 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர். 

ராஜஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் குல்தீப் சென் 3 விக்கெட்டுகளையும், சலால் 2 விக்கெட்டுகளையும் மற்றும் அவேஷ் கான் ஒரு விக்கெட்டினையும்  பெற்றுக்கொண்டனர். 

இந்த போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல் தொடரின் 6ம் இடத்திற்கு முன்னேறியதுடன், ராஜஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. 

இதேவேளை, இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நாளைய(11) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

மும்பையில் நாளை(11) இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version