பாதுகாப்பு அமைச்சின் தமிழ் சிங்களப் புத்தாண்டு விழா  

பாதுகாப்பு அமைச்சின் தமிழ் சிங்களப் புத்தாண்டு விழா  பாதுகாப்பு அமைச்சின் நலன்புரி பிரிவினால் பத்தரமுல்லையில் உள்ள பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் நேற்று(10) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் சிங்களப் புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.

சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை அளித்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த புத்தாண்டு கொண்டாட்டம் பல  பாரம்பரிய விளையாட்டுகளை உள்ளடக்கியிருந்ததோடு, பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களின் கலாச்சார அம்சங்களும் நிகழ்வை வண்ணமயமாக்கின.

புத்தாண்டு விழா நடைபெறும் வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு பாதுக்காப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவால் வரவேற்பளிக்கப்பட்டதோடு, புத்தாண்டு அழகி போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு ஜனாதிபதிபரிசுகளை வழங்கினார்.  

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply