அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு 

அஸ்வெசும கொடுப்பனவை பெறுவதற்கான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலனை செய்யப்பட்டதன் பின்னர் மேலும் 182,140 குடும்பங்கள் கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 

குறித்த குடும்பங்களுக்கு நிலுவைத்தொகை உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளையும் ஏப்ரல் மாதம் 18ம் திகதி வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதாக  ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார். 

இதற்கமைய 1,854,000 பேர் தற்போது அஸ்வெசும கொடுப்பனவை பெறுவதுடன், அதற்காக 58.5 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

Social Share

Leave a Reply