குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சையின் போது உயிரிழந்த இரு பெண் நோயாளர்களுக்கு, நடத்தப்பட்ட PCR பரிசோதனையின் போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் கொரோனா தொற்றுக்கும் குறித்த இரு மரணங்களுக்கும் இடையில் நேரடி தொடர்பு காணப்படுகின்றதாக இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை.
குறித்த இரு மரணங்களும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் நேற்று(11) பதிவாகியிருந்தது.
மேலும், குறித்த இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட அறையிலிருந்த ஏனைய நோயளர்களும், வைத்தியசாலையில் பணியாற்றிய சுகாதார ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.