அதிவேக வீதிகளின் வருமானம் 25 % அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிவேக வீதிகளின் ஊடாக கடந்த 11ம் திகதி 128,000 வாகனங்கள் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
இதனுடாக 46 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அடுத்த இரண்டு நாட்களில் அதிவேக வீதிகளின் வருமானம் 60%மாக அதிகரிக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.