IMFஇன் முகாமைத்துவ பணிப்பாளராக மீண்டும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் இரண்டாவது ஐந்தாண்டு காலத்திற்கு நேற்று (12) அவர் தேர்வு செய்யப்பட்டார்.

அந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே வேட்பாளர் இவர் எனவும், இந்த நியமனத்தை வழங்குவதற்கு முன்னர் அவருடன் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அவரது வலுவான தலைமை IMF செயற்குழுவினால் பாராட்டப்பட்டுள்ளது.

பல்கேரிய நாட்டைச் சேர்ந்த ஜோர்ஜீவா, 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளராக பணியாற்றி வருகின்றார்.

இதற்கு முன்னர், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் உலக வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் அவர் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version